My Blog List

Sunday, 27 December 2015

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் (SSC Technical) காலியாக உள்ள 91 பொறியாளர் பணி

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் (SSC Technical) காலியாக உள்ள 91 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்த இருபாலகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineer  (SSC Technical-47th Short Service Commission) ஆண்கள் மட்டும்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
துறை: சிவில் - 25
துறை: மெக்கானிக்கல் - 15
துறை: ஆட்டோமொபைல் மற்றும் வொர்க்‌ஷாப் டெக்னாலஜி - 02
துறை: ஏரோநாட்டிக்கல், ஏவியேஷன், ஏரோஸ்பேஸ், பாலிஸ்டிக்ஸ், ஏவியோனிக்ஸ் - 02
துறை: கம்ப்யூட்டர்/ஐடி பொறியாளர் - 10
துறை: எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன்ஸ், சேட்டிலைட் கம்யூனிகேசன்ஸ் - 15
துறை: எலக்ட்ரானிக்ஸ், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் -07
துறை: ஃபுட் டெக்னீசியன்/பயோ டெக்னீசியன் - 03
துறை: பயோ மெடிக்கல் - 02

பணி: Engineer (SSC Technical-18th Short Service Commission)  பெண்கள் மட்டும்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
துறை: சிவில் - 04
துறை: மெக்கானிக்கல் - 02
துறை: எலக்ட்ரிக்கல் - 02
துறை: டெலிகம்யூனிகேசன் - 02.
தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.
வயது வரம்பு: 20 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதித்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி அளிக்கப்படும் இடம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் பயிற்சியளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment