My Blog List

Thursday, 28 January 2016

இளநிலை உதவியாளர் நியமனம்: நாளை கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் 98 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை (ஜன.30) பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
 தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை-6 என்ற முகவரியில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க வரும் தகுதி பெற்றவர்கள், தேர்வாணையத்திலிருந்து பெறப்பட்ட அறிவிப்பு கடிதத்தையும், தேர்வு நுழைவுச் சீட்டையும் எடுத்து வரவேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
 

இந்திய பொருளாதார, புள்ளியியல் பணி தேர்வு: யூபிஎஸ்சி அறிவிப்பு


இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய புள்ளியியல் பணி 2016 தேர்வுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 28
பணி: Indian Economic Service  - 15
பணி: Indian Statistical Service    - 13
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொருளாதாரம், வர்த்தக பொருளாதாரம், போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
புள்ளியியல், கணித புள்ளியியல் பாடங்களை கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது புள்ளியியல், கணித புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ள தேதி: 07.03.2016 - 04.04.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித உற்பத்தி நிறுவனத்தில் (டி.என்.பி.எல்) நிர்வாக பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள பணி

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித உற்பத்தி நிறுவனத்தில் (டி.என்.பி.எல்) நிர்வாக பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager (IT) - 01
பணி: Manager (Finishing House - 01
பணி: Management Trainee(R & D and QC) - 12
பணி: Management Trainee (Plantation) - 04
வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி கணக்கீடப்படும். உச்ச பட்ச வயதில் எம்.பி.சி., பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை உள்ளது.
கல்வித் தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., விவசாயத்துறையில் பி.எஸ்சி., அக்ரிகல்சர் அல்லது ஹார்டிகல்சர் அல்லது பாரஸ்ட்ரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (Hr)
Tamil Nadu Newsprint And Papers Limited
Kagithapuram - 639 136,
Karur District, Tamil Nadu .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/hr%20advt%2021jan2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அதாரிடி ஆப் இந்தியா(ஐ.ஆர்.டி.ஏ) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணி

ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பான காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அதாரிடி ஆப் இந்தியா(ஐ.ஆர்.டி.ஏ) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆணையம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மொத்த காலியிடங்கள்: 24
பணி: Junior Officer
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பட்டம் மற்றும் ஏ.சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., எல்.எல்.பி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
எழுத்துத் தேர்வு மையங்கள்: ஐ.ஆர்.டி.ஏ.,வின் இளநிலை அதிகாரி பதவிக்கான தேர்வை தமிழ்நாட்டில் சென்னையிலும், புதுச்சேரியிலும், நாட்டின் பல்வேறு இதர மையங்கள் எழுதலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.irdai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.irdai.gov.in/ADMINCMS/cms/frmGeneral_Layout.aspx?page=PageNo2730&flag=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள இஇஜி, இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய பணி

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள இஇஜி, இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
 இஇஜி இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர்களாக 12 பேரும், ஆடியோமெட்ரிசியன்களாக 17 பேரும், பிராஸ்தடிக் கிராஃப்ட்ஸ்மேன்களாக 64 பேரும், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்டுகளாக 18 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்,
 விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், கல்வித் தகுதிகள் உள்ளிட்டவற்றின் மூலம் நேரடி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வோ, வாய்மொழித் தேர்வோ கிடையாது.
‌w‌w‌w.‌m‌rb.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதளத்தின் மூலமே பிப்ரவரி 10-க்குள் விண்ணப்பிக்க முடியும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய யுரேனியக் கழகத்தில் (Uranium Corporation of India Limited (UCIL)) மேலாண்மை டிரெய்னி

இந்திய யுரேனியக் கழகத்தில் (Uranium Corporation of India Limited (UCIL)) மேலாண்மை டிரெய்னிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 06/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy General Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,000.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Chief Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 41க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Accounts) - 01
சம்பளம்: ரூ.16,400 - 40,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின் 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (EDP) - 02
சம்பளம்: ரூ.16,400 - 40,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (CRD) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Personnel) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Environment Engineering) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Control Research & Development) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50 இதனை ‘Uranium Corporation of India Limited என்ற பெயருக்கு Jaduguda-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ucil.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
General Manager(Pers./IRs.)
Uranium Corporation of India Limited,
(A Government of India Enterprise)
P.O. Jaduguda Mines, Distt.- Singhbhum East,
JHARKHAND-832102
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.2.2016.
மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ucil.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 இளநிலை உதவியளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 இளநிலை உதவியளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்..001/PR33/2016,  தேதி: 13.01.201
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்ற ரீதியில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் Word Processing சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 75
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தங்களது படிப்பை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750. எஸ்சி.,எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை Registrar, Anna University என்ற பெயரில் Chennai-ல் மாற்றத்தக்க வையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http:/www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar,
Anna University,
CHENNAI- 600025.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/JA-ADV-2016.pdf என்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும்.