My Blog List

Thursday, 3 December 2015

மாற்றுத் திறனாளி பள்ளி ஆசிரியர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளியில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர்-  பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்-துணை விடுதிக்காப்பாளர் பணியிடங்கள் சில காலியாகவுள்ளன.
தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி வரும் 15.
இந்தப் பணியிடங்கள் குறித்த அனைத்து அறிவுரைகள், விவரங்கள்-மாதிரி விண்ணப்பத்தினை www.tn.gov.in,   www.scd.tn.gov.in இணையதளங்கள்  மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment