My Blog List

Thursday, 10 December 2015

சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் எ

சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் எனப்படும் துணை ராணுவப்படை பெரும்பாலும் சி.ஆர்.பி.எப்., என்ற பெயராலேயே அறியப்படுகிறது. தேர்தல் மற்றும் இது போன்ற முக்கியமான கால கட்டங்களில் இந்தப் படையில் பணி பெரிதும் போற்றத்தக்கது. இந்தப் படையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பணி நியமனங்களின் மூலம் கான்ஸ்டபிள் பிரிவில் 488ம், ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் 82 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: கான்ஸ்டபிள் பதவிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஹெட் கான்ஸ்டபிள் பதவிக்கு ப்ளஸ்டூவிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் விளையாட்டுப் பிரிவில் சிறப்புத் தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: பிஸிக்கல் ஸ்டான்டர்ஸ் டெஸ்ட், ஸ்போர்ட்ஸ் டிரையல்ஸ் டெஸ்ட், மருத்துவப் பரிசோதனை என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50/-க்கான டி.டி.,யை DIGP, GC CRPF, New Delhi என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The DIG GC-CRPF, Jharoda Kalan, New Delhi-110072.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.12.2015
இணையதள முகவரி: <http://crpf.nic.in/RECRUITMENT/846515.pdf>

No comments:

Post a Comment