My Blog List

Thursday, 10 December 2015

என்.டி.பி.சி.,யில் பயிற்சியுடன் பணி

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் என்.டி.பி.சி., நிறுவனம் 1975ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது நமது நாட்டின் பிரமாண்டமான மற்றும் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் டிப்ளமோ டிரெய்னி காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவது ஒரு பிரிவிலான மூன்று வருட டிப்ளமோ படிப்பை குறைந்த பட்சம் 70 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
ஸ்டைபண்டு எவ்வளவு: ஒரு வருட காலம் நடத்தப்படும் இந்தப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதம் ரூ.15 ஆயிரம் ஸ்டைபண்டாகப் பெறலாம்.
விண்ணப்பக் கட்டணம்: என்.டி.பி.சி.,யின் மேற்கண்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க ரூ.300/-ஐ டவுண்லோடு செய்து பெறப்பட்ட சலான் வாயிலாக செலுத்த வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறவும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.12.2015
இணையதள முகவரி: http://www.ntpc.co.in/

No comments:

Post a Comment