இன்ஸ்யூரன்ஸ் என்றாலே உடனே பலரின் நினைவுக்கும் வருவது எல்.ஐ.சி.,
எனப்படும் லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம்தான். இந்த
நிறுவனம் 1956ல் தேசியமயமாக்கப்பட்டு அது முதல் இன்று வரை தொடர்ந்து
லாபகரமாக இயங்கி வரும்
பெருமைக்குரிய பொதுத்துறை நிறுவனமாகும்.
2000ஆவது ஆண்டு முதல் காப்பீட்டுத்துறை தனியார்மய போட்டிகளை சந்திக்கத் துவங்கினாலும் இன்று வரை 70க்கும் அதிகமான சந்தைப் பங்குகளை எல்.ஐ.சி., நிறுவனம் தன்னிடம் கொண்டுள்ளது. பாலிசிதாரர்களின் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டியிருப்பதும்,
உரிமங்களை வழங்குவதில் 99 சதவிகித உரிமங்களைத் தொடர்ந்து வழங்கி வருவதிலும் இந்த நிறுவனம் உலக அளவில் சாதனைகளைப் படைத்துள்ளது.
லஞ்சம் லாவண்யம் இல்லாத சேவை, நவீனமய சேவைகள், அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றும் ஊழியர்கள் என்று இந்த நிறுவனத்தின் சாதனைகளை தொடர்ந்து அடுக்கிக் கொண்டே போகலாம். நாட்டின் உள்கட்டுமானத்திற்கு அளப்பரிய பங்காற்றும் முக்கிய நிறுவனமான எல்.ஐ.சி., இன்றைய இளைஞர்களின் கனவு இலக்காகவே உள்ளது என்று சொல்லலாம். பல ஆண்டுகளாக கிளரிக்கல் பிரிவில் எந்த பணி நியமனமும் இல்லாத நிலையில் இங்கு பணியாற்ற அரிய வாய்ப்பாக ஜெனரலிஸ்ட் - உதவி நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 700 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை எல்.ஐ.சி., வெளியிட்டுள்ளது.
வயது: 01.12.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.12.1985க்கு பின்னரும், 01.12.1994க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் அதன் பின் மருத்துவத் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: எல்.ஐ.சி.,யின் உதவி நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.600/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.100/- மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.01.2016
இணையதள முகவரி: www.licindia.in/careers.htm

No comments:
Post a Comment