My Blog List

Thursday, 17 December 2015

பட்டம் படித்தவர்களுக்கு விமானப்படையில் வாய்ப்பு

இந்திய விமானப் படை சர்வ தேச அளவில் பிரசித்தி பெற்ற ஒரு பாதுகாப்புப் படையாகும். தொழில் நுட்ப ரீதியிலும் சரி, அர்ப்பணிப்புடன் கூடிய வீரர்களைக் கொண்டிருப்பதிலும் சரி, இந்தப் படை நமது ராணுவப் படைகளில் புகழ் பெற்ற படையாக திகழ்கிறது. இந்தப் படையில் சார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் பிளையிங் பிராஞ்ச், டெக்னிகல் பிராஞ்ச், கிரவுண்ட் டியூடி பிராஞ்ச் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் மொத்தம் 601 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆப்காட் பொது எழுத்துத் தேர்வாக இது நடத்தப்பட உள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: இந்திய ராணுவப் படையின் சார்ட் சர்வீஸ் கமிஷன் பணியிடங்களில் 201 இடங்கள் பிளையிங் பிராஞ்சிலும், தலா 200 இடங்கள் கிரவுண்ட் டியூடி மற்றும் டெக்னிகல் பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 601 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.01.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.01.1993க்கு பின்னரும், 01.01.1997க்கு முன்னரும் விண்ணப்பதாரர்கள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பிளையிங் பிராஞ்ச் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இவர்கள் ப்ளஸ்டூ அளவிலான படிப்பில் இயற்பியல், கணிதம் படித்தவராக இருக்க வேண்டும். பி.இ., மற்றும் பி.டெக்., படித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
டெக்னிகல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரானிக்ஸ் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் நான்கு வருட இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கிரவுண்ட் டியூடி பிரிவுக்கு பட்டப் படிப்பை முடித்தவர்கள், பி.காம்., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., முது நிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும். பாதுகாப்புப் படை சார்ந்த பணியிடங்கள் என்பதால் மேற்கண்ட தகுதிகளுடன் குறைந்த பட்ச உயரம், எடை போன்ற இதர தேவைகளும் உண்டு. முழுமையான் விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.12.2015
இணையதள முகவரி: <http://careerairforce.nic.in/tview3.asp?link_temp_id=300&lid=153>

No comments:

Post a Comment