நமது நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் கர்நாடக மாநிலம் உடுப்பியைத்
தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சிண்டிகேட் வங்கிக்கு முக்கியமான இடம் உண்டு.
1925ல் உடுப்பியிலுள்ள நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மையமாகக்
கொண்டே இந்த வங்கி நிறுவப்பட்டது. பின்னர் வங்கிகள் தேசியமயமாக்கலின் போது
இந்த வங்கியும் பொதுத்துறை வங்கியாக மாற்றப்பட்டது.
இன்றுவரை சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காக அறியப்படும் இந்த வங்கியில் புரொபேஷனரி அதிகாரியாக பணிபுரிவதற்காக படிப்புடன் கூடிய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பினை இந்த வங்கி வெளியிட்டுள்ளது. மனிபல் பல்கலைக் கழகம், நிட் பல்கலைக் கழகம் மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகிய மூன்றும் இணைந்து இந்த வாய்ப்பினை வழங்குகின்றன. இதன் மூலம் மொத்தம் 600 பேருக்கு பி.ஜி., டிப்ளமோ இன் பேங்கிங் அண்டு பினான்ஸ் படிப்பில் இணைய வாய்ப்பு வருவதோடு, வெற்றி பெறும் பட்சத்தில் வங்கியின் அதிகாரியாகும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
வயது: 01.10.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.10.1987க்கு பின்னரும், 01.10.1995க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான அப்ஜெக்டிவ் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். இந்தத் தேர்வினை ஐ.பி.பி.எஸ்., அமைப்பு மூலமாக எதிர்கொள்ள வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பி.ஜி.டி.பி.எம்., படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
படிப்பின் தன்மை: பி.ஜி.டி.பி.எம்., படிப்புக்கு மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை சிண்டிகேட் வங்கியிலிருந்து கடனாகப் பெற்று படிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. 12 மாதம் நடத்தப்படும் வகுப்புக்கான காலத்தில் முதல் 9 மாதங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரத்து 500 ஸ்டைபண்டாக வழங்கப்படும். கடைசி 3 மாதங்களுக்கான காலகட்டத்தில் ரூ.10 ஆயிரம் ஸ்டைபண்டாகப் பெறலாம்.
விண்ணப்பக் கட்டணம்: சிண்டிகேட் வங்கியின் மேற்கண்ட பணிவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ரூ.600/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: இந்த எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டின் சென்னை, கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.12.2015

No comments:
Post a Comment