My Blog List

Sunday, 13 December 2015

ராணுவத்தில் இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு

                    நமது நாட்டின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் முக்கியமான ராணுவப்படைகளில் ஒன்றுதான் இந்திய ராணுவமாகும். சர்வதேச அளவில் எண்ணிக்கையிலும், தொழில் நுட்ப திறன்களிலும் இது பிரசித்தி பெற்றது. இந்தப் படையில் குறுகியகால நிலைப் பணியடிப்படையில் காலியாக உள்ள டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்னென்ன பிரிவுகள்: இந்திய ராணுவத்தின் டெக்னிகல் பணியிடங்களைப் பொறுத்த வரை ஆண்களுக்கு 100 இடங்களும், மகளிருக்கு 10 இடங்களும் காலியாக உள்ளன. ஆண்களுக்கான காலியிடங்களைப் பொறுத்த மட்டில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 25ம், மெக்கானிக்கலில் 15ம், ஆட்டோமொபைல் ஒர்க்-ஷாப் டெக்னாலஜி, ஏரோனாடிக்கலில் தலா 2ம், ஐ.டி., மற்றும் கம்ப்யூட்டர் சார்ந்த
பிரிவுகளில் 10ம், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பிரிவில் 15ம், எலக்ட்ரானிக்ஸ், ஆப்டோ-எலக்ட்ரானிக்ஸ், பைபர் ஆப்டிக்ஸ் பிரிவுகளில் 7ம், இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 4ம், புட் அண்டு பயோடெக்னாலஜியில் 3ம், பயோ-மெடிக்கல் இன்ஜினியரிங்கில் 2ம் காலியாக உள்ளன.
மகளிருக்கான காலியிடங்களைப் பொறுத்த மட்டில் சிவிலில் 4, மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், டெலிகம்யூனிகேஷனில் தலா 2, முன்னாள் ராணுவத்தினரின் விதவை மனைவியருக்கு 1ம், நான்-டெக்னிகல் பிரிவுகளில் 18ம் காலியிடங்கள் உள்ளன.
வயது: இந்திய ராணுவத்தின் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.10.1989க்கு பின்னரும் 01.10.1996க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மகளிருக்கான நான்-டெக்னிகல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். டெக்னிகல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை தொடர்புடைய பிரிவுகளில் முடித்திருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை பின்வரும் இணைய தளத்தைப் பார்த்து அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 08.01.2016
இணையதள முகவரி: www.joinindianarmy.nic.in

No comments:

Post a Comment