My Blog List

Friday, 15 May 2015

இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனில் பல்வேறு பணியிடங்கள்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள துணை பொது மேலாளர், மேலாளர், முதுநிலை கணக்கு அலுவலர் மற்றும் இளநிலை கணக்காளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. துணை பொது மேலாளர் (நிதி) -  01
சம்பளம்: மாதம் ரூ 36.600. - 62,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
2. மேலாளர் (நிதி) - 01
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
3. மூத்த கணக்கு அலுவலர் - 03
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 46,500
தகுதி: CA/ICWA முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் முழு நேர எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
4. ஜூனியர் கணக்காளர் - 03

சம்பளம்: மாதம் ரூ.10,600 - 28,900.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: CA /CMA முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
பணி எண் 1 - 3க்கு  ரூ. 1000
 
பணி எண்: 4க்கு ரூ. 600.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.seci.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://seci.gov.in/upload/uploadfiles/files/DETAILED%20FINANCE%20ADVT_%20EMP_%20NEWS%20ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

காலியாகவுள்ள 268 உதவி புள்ளியியல் ஆய்வாளர்


      தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வியாழக்கிழமை (07.05.2015)வெளியிட்ட அறிவிப்பில், காலியாகவுள்ள 268 உதவி புள்ளியியல் ஆய்வாளர் (Assistant Statistical Investigator) பணியிடங்கள் நேரடியாக எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வுஅடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ள இப்பணிக்கு இணையதளம் (www.tnpscexams.net) மூலமாக மட்டுமே விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 3-ஆம் தேதி ஆகும். இதேபோல் வங்கி, அஞ்சலகங்கள் மூலமாக விண்ணப்பக் கட்டணம்- தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த ஜூன் 5 கடைசி நாள்.

கல்வித்தகுதி:
புள்ளியல் பாடத்தில் இளங்கலைப்பட்டம் அல்லது கணிதம், கணினி அறிவியல், பொருளாதாரம், படித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு இளநிலைப் பட்டத்துடன் பொருளாதாரம், கணித பொருளாதாரம் போன்ற சிறப்பு பாடங்களுடன் முதுநிலையில் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. கொள்குறி வகை என்ற அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.50 ஆகும்/ தேர்வுக் கட்டணம் ரூ.100. எழுத்துத் தேர்வின் போது பொருளாதாரம், பொது அறிவுடன், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

முதல் தாள் தேர்வானது ஜூலை 1 ஆம் தேதி காலை 10 மணிக்கும், இரண்டாம் தாள் மதியம் 2.30 தொடங்கி நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம்

இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு www.tnpsc.gov.in இணையத்தில் அறியலாம்.

இந்திய ராணுவத்தில் ஹவில்தார் ஆகலாம்

இந்திய ராணுவத்தின் தரைப்படைப் பிரிவில் தற்போது 'ஹவில்தார்' பயிற்சியுடனான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 334 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அறிவியல் பிரிவில் - 200 பேர். கலைப் பிரிவில் - 134 பேர். இந்தியக் குடியுரிமை பெற்ற, இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆண்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

* அறிவியல் பிரிவு பணிக்கு கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினியியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம்.

* கலைப் பிரிவு பணிக்கு, இந்தி, ஆங்கிலம், உருது, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியியல், சமூகவியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்பப் படிவம் தயார் செய்ய வேண்டும். அதில் புகைப்படம் ஒட்டி, அனைத்து விவரங்களையும் நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படங்கள், அஞ்சல் உறை ஆகியவை சான்றொப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் அருகிலுள்ள மண்டல தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவு விண்ணப்பதாரர்கள்

HQ Trg Zone,
Fort Saint George,
Chennai- 600009
என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகப்பில் “APPLICATION FOR HAVILDAR EDUCATION” என்று குறிப்பிட வேண்டும்.

முக்கிய தேதிகள்: விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 15.5.2015

விமான நிலையங்களில் வேலை! 322 பேருக்கு வாய்ப்பு



ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பு, டெபுடி கம்பெனி செக்ரட்டரி, மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட 322 காலி பணியிடங்களை பல்வேறு துறைவாரியாக நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி:

பி.காம்/எம்.காம், பி.டெக்/பி.இ, பி.சி.ஏ./எம்.சி.ஏ., சி.ஏ./ஐ.சி.டபுள்யூ.ஏ. போன்ற பட்டப் படிப்புகளை அந்தந்த தகுதிகளுக்கு ஏற்ப படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினர் ரூ.500ஐ பாரத ஸ்டேட் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் செலுத்தி செலானை பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். சுய கையொப்பமிட்ட புதிதாக எடுத்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும்.

முக்கியத் தேதிகள்:

ஆன்லைனில் வரும் 11.5.2015 முதல் தொடங்கி 10.6.2015 வரை முதல் கட்ட பதிவையும் இரண்டாம் கட்ட பதிவை 20.6.2015 வரை பதிவு செய்யலாம்.

விண்ணப்பக் கட்டணத்தை 15.6.2015 வரை செலுத்தலாம்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 26.7.2015

விரிவான தகவல்களுக்கு: www.davp.nic.i

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 மேலாண்மை பயிற்சி பணி



பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Bharat Sanchar Nigam Ltd (BSNL)

காலியிடங்கள்: 400

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:


வெளிப்பிரிவு:
1. Telecom Operations - 150
2. Telecom Finance - 50

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
உள் பிரிவு:
3. Telecom Operations - 150
4. Telecom Finance - 50

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

தகுதிகள்:
ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், கணினியில், ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
நிதியியல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ, ஐசிடபுள்ஏ, சிஎஸ் போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.750.

விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bsnl.in/opencms/export/sites/default/BSNL/about_us/hrd/pdf/MTExternal.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Government Exam Dates

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வு: ஜூன் 12, 2015
இந்திய வனச் சேவை முதனிலை தேர்வு: ஜூன் 12, 2015
என். டி. ஏ., தேர்வு: ஜூலை 17, 2015
சி.டி.எஸ்., 2ம் நிலைத் தேர்வு: ஆகஸ்ட் 14, 2015

எஸ்.எஸ்.சி. அரசுப் பணி

மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்புவதில் ஸ்டாப் செலக்சன் கமிசன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு அனைவராலும் அறியப்படுகிறது. இந்த அமைப்பின் சார்பாக பட்டதாரிகளுக்காக நடத்தப்படும் பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள் என்னென்ன: சென்ட்ரல் செக்ரட்ரேட் சர்வீசில் உதவியாளர், சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷனின் உதவியாளர், இன்டலிஜென்ஸ் பீரோவின் உதவியாளர், ரயில்வே அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகத்தின் சைபர் பிரிவு, ஏ.எப்.ஹெச்.க்யூ., இதர அமைச்சகங்கள் ஆகியவற்றில் உதவியாளர், இன்ஸ்பெக்டர் ஆப் இன்கம்டாக்ஸ், இன்ஸ்பெக்டர் ஆப் சென்ட்ரல் எக்சைஸ், இன்ஸ்பெக்டர் பிரிவென்டிவ் ஆபிசர் - சி.பி.இ.சி., அஸிஸ்டென்ட் என்போர்ஸ்மென்ட் ஆபிசர், சி.பி.ஐ.,யில் சப்-இன்ஸ்பெக்டர், அஞ்சல் துறையில் இன்ஸ்பெக்டர், சி.ஏ.ஜி.,யில் டிவிஷனல் அக்கவுன்டன்ட், ஸ்டாடிஸ்டிகல் இன்வெஸ்டிகேடர் - கிரேடு 2, நேஷனல் இன்வெஸ்டிகேஷன் அகாடமி, சென்ட்ரல் பீரோ ஆப் நர்காடிக்ஸ், சி.ஏ.ஜி.,யில் ஆடிட்டர், மத்திய அரசு அலுவலகங்களில் அப்பர் டிவிஷன் கிளார்க், சி.பி.டி.டி., மற்றும் சி.பி.இ.சி.,யில் டாக்ஸ் அஸிஸ்டென்ட் போன்ற இடங்கள் இந்த பொது எழுத்துத் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது: பிரிவு வாரியாக வயது வரம்பு மாறுபடுகிறது. எனவே முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி: இந்தப் பதவிகளுக்குப் பொதுவான கல்வித் தகுதியாக பட்டப் படிப்பு தேவைப்படும். ஸ்டாடிஸ்டிகல் இன்வெஸ்டிகேடர் பதவிக்கு சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை: பொது எழுத்துத் தேர்விற்குப் பின்னர் நேர்காணல், ஸ்கில் டெஸ்ட், கம்ப்யூட்டர் புரொபீசியன்சி டெஸ்ட் போன்றவை பிரிவைப் பொறுத்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் சில குறைந்தபட்ச உடல் தகுதிகளும் கூடுதலாகத் தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 01.06.2015
இணையதள முகவரி: http://ssc.nic.in/

ராஷ்ட்ரீய இஸ்பாட் நிகாம் நிறுவனத்தில் டெக்னிகல் வேலை

இந்தியாவின் இரும்பு உற்பத்தித் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற விசாகப்பட்டினம் ஸ்டீல் லிமிடெட் நிறுவனம் நவரத்தினா பொதுத்துறை நிறுவனங்களுள் முக்கியமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் நிறுவனமான ராஷ்ட்ரீய இஸ்பாட் நிகாம் நிறுவனம் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தில் டெக்னிகல் பிரிவில் ஆபரேட்டர் கம்டெக்னீசியன் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகளும் காலியிடங்களும்: ராஷ்ட்ரீய இஸ்பாட் நிகாம் நிறுவனத்தின் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி காலியிடங்கள் கெமிக்கலில் 11ம், எலக்ட்ரிகலில் 114ம், மெக்கானிகலில் 225ம் நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.04.2015 அடிப்படையில் விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினரின் வயது 27க்குள்ளும், ஓ.பி.சி., பிரிவினரின் வயது 30க்குள்ளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரின் வயது 32க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 01.04.2015 அடிப்படையில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு கெமிக்கல், எலக்ட்ரிகல், மெக்கானிகல் ஆகிய இன்ஜினியரிங் பிரிவு ஏதாவது ஒன்றில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சார்ந்திருக்கும் பிரிவில் தேர்வு இருக்கும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.300/-ஐ இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியின் RINL Recruitment Account No. 30589461220ல் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.06.2015
இணையதள முகவரி: http://www.vizagsteel.com/myindex.asp?tm=9&url=code/tenders/viewjobads.asp

group 2 exam

தமிழக அரசுப் பணியிடங்களை தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக இந்த ஆண்டுக்கான குரூப் 2 (இன்டர்வியூ) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள்: டெபுடி கமர்சியல் டாக்ஸ் ஆபிசரில் 8, கிரேடு 2 - சப்-ரெஜிஸ்ட்ரார் பிரிவில் 23, சிறைத்துறையில் பயிற்சி அதிகாரியில் 2, அஸிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர் ஆப் லேபரில் 11, ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபிசரில் 17, இதே பிரிவு எம்ப்ளாய்மென்ட் விங்கில் 1, டைரக்டரேட் ஆப் விஜிலென்ஸ் அண்டு ஆண்டி கரப்ஷனில் 2, காவல் துறையின் உளவுத் துறை சார்ந்த ஸ்பெஷல் பிராஞ்ச் அஸிஸ்டென்டில் 6ம், டி.என்.பி.எஸ்.சி.,யின் அஸிஸ்டென்ட் செக்சன் ஆபிசரில் 3ம், இதே பிரிவு புரொகிராமரில் 4ம், லோகல் பண்டு ஆடிட்டர் துறையின் அஸிஸ்டென்ட் இன்ஸ்பெக்டரில் 78ம், இந்து ரிலீஜியஸ் அண்டு சாரிடபிள் எண்டோவ்மென்ட்ஸ் அட்மினிஸ்ட்ரேடிவ் துறையின் ஆடிட் இன்ஸ்பெக்டர் பிரிவில் 28ம், சூப்பர்வைசர் ஆப் இன்டஸ்ட்ரியல் கோஆப்பரேடிவ்ஸ் துறையில் 4ம், சீனியர் இன்ஸ்பெக்டர் ஆப் கோஆப்பரேடிவ் சொசைடீஸ் பிரிவில் 333ம், அக்ரிகல்சுரல் மார்கெடிங்கில் சூப்பர்வைசர்/ஜாயின்ட் சூப்பரிண்டென்டண்ட் பிரிவில் 72ம், ஹேண்ட்லூம் இன்ஸ்பெக்டரில் 29ம், ரெவின்யூ அஸிஸ்டெண்டில் 618ம், கிரேடு 2 எக்சிக்யூடிவ் ஆபிசரில் 2ம் காலியிடங்கள் உள்ளன.
வயது மற்றும் கல்வித் தகுதி: பொதுவாக இந்தப் பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் வாயிலாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து சில கல்வித் தகுதி தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்தின் வாயிலாக அறியவும்.
விண்ணப்பக் கட்டணம்: முதல் நிலைத் தேர்வுக்கு ரூ.125/- மற்றும் இறுதித் தேர்வுக்கு ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு ஜூலை 29ம் தேதி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 29.05.2015
இணையதள முகவரி: www.tnpsc.gov.in/latest-notification.html

Sunday, 10 May 2015

தமிழகத்தில் காலியாகவுள்ள 268 உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது

தமிழகத்தில் காலியாகவுள்ள 268 உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 3 -ஆம் தேதி கடைசியாகும்.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்ட தேர்வு அறிவிக்கை விவரம்:
புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 268 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணிகளுக்கு இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய தேர்வுகளின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்தப் பணிகளுக்கு மாதம் ரூ.5,000 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தின் (www.tnpscexams.net) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 3-ஆம் தேதி ஆகும்.
வங்கி, அஞ்சலகங்கள் மூலமாக விண்ணப்பக் கட்டணம்-தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த ஜூன் 5 கடைசி நாள்.
கல்வித் தகுதி: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது.
முதல் தாள் தேர்வானது ஜூலை 1 ஆம் தேதி காலை 10 மணிக்கும், இரண்டாம் தாள் மதியம் 2.30 தொடங்கி நடைபெறும்.
இந்தத் தேர்வு என்பது கொள்குறி வகை என்ற அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வினை எதிர்கொள்ள கணிதம், கணினி அறிவியல், பொருளாதாரம், அல்லது ஏதாவது ஒரு இளநிலைப் பட்டத்துடன் பொருளாதாரம், கணித பொருளாதாரம் போன்ற சிறப்பு பாடங்களுடன் முதுநிலையில் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.50 ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ.100. எழுத்துத் தேர்வின் போது பொருளாதாரம், பொது அறிவுடன், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இந்தத் தேர்வானது சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மையங்களில் நடைபெறவுள்ளன.
எழுத்துத் தேர்வுக்கான பாடத் திட்டம்-தேர்வுத் திட்டம் ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த சந்தேகங்கள் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் நிரப்பப்பட உள்ள 176


தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் நிரப்பப்பட உள்ள 176 பட்டயக் கணக்காளர், சட்ட அலுவலர், திட்ட உதவியாளர், உதவி பொறியாளர், திட்டமிடல் உதவி வரையாளர், சமூக அதிகாரி, தொலைபேசி ஆஃப்ரேட்டர், புகைப்படக்காரர், நூலகர், சுருக்கெழுத்தர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, இந்தியாவின் நான்காவது பெருநகரமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பர எண்: 1/Estt./CMDA-Recruitment/2015
தேதி: 03.05.2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Charted Accountant - 01 
2. Law Officer - 02
3. Assistant Planner -  16
4. Assistant Engineer - 05
5. Planning Assistant - 44
6. Assistant Draughtsman - 01
7. Community Officer - 02
8. Telephone Operator
9. Photographer - 01
10. Field man - 11
11. Librarian - 116
12. Stenographer - 10
13. Typist - 04
14. Junior Assistant - 22
15. Driver - 18
16. Messenger  - 22
17. Watchman - 09
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கீழ்கண்ட அதிகாரப்பூர்வ இணையதத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Member-Secretary,
CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY
THALAMUTHU - NATARAJAN BUILDING
NO.1, GANDHI-IRWIN ROAD,
EGMORE, CHENNAI-600 008.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய Advertisement (Original): http://www.cmdachennai.gov.in/pdfs/Application-CMDA-Recruitment.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சிப் பணி

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி திட்டத்தில் சேர்ந்து பணியாற்ற சிவில், கெமிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Assistant (Level-II)
ஆராயச்சி திட்டத்தின் பெயர்: EIA Study for CPV Project, Walwhan (Pro.No.C-7-1954)
தகுதி: சிவில், கெமிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000 - 14,000
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.neeri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Scientist & Head, WT & M Division, CSIR-NEERI, Nehru Marg, Nagpur-440020
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.05.2015
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.05.2015
மேலும் முழுமையான விவரங்களுக்கு www.neeri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 6 நூலகர் பணி



திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 6 நூலகர் பணியிடங்களுக்கான அறிவிப்பை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 425/26/04/2015
தேதி: 26-04-2015
பணி: நூலகர்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6000.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் மற்றும் NET அல்லது SLET, SET, JRF, Ph.D முடித்திருக்க வேண்டும்.
பணியிடம்: வேலூர், தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.thiruvalluvaruniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

இருட்டறை உதவியாளர் காலிப் பணியிடம்: உத்தேசப் பதிவுமூப்பு விவரம் வெளியீடு

இருட்டறை உதவியாளர் காலிப் பணிடத்துக்கு, வெளியிடப்பட்டுள்ள உத்தேசப் பதிவுமூப்பு விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.
 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 223 இருட்டறை உதவியாளர் காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் டிஆர்ஏ, சிஆர்ஏ கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்தக் காலிப் பணியிடத்துக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி அன்று வயது வரம்பு, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 35 வயதும், பிசி,  பிசிஎம், எம்பிசி வகுப்பினருக்கு 32 வயதும், இதர வகுப்பினருக்கு 30 வயதும் இருக்க வேண்டும்.
 இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையில் நடந்து வருகிறது. பரிந்துரைக்கப்படும் பதிவுதாரர்களின் உத்தேசப் பதிவு மூப்பு விவரங்கள், தற்காலிக பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  பரிந்துரைக்கப்படும் இறுதிப் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.
 மேற்கண்ட கல்வித் தகுதியை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களைச் சரிபார்த்து கொள்ளலாம். பதிவு மூப்புக்குள் விடுபாடு அல்லது திருத்தம் இருந்தால் வரும் மே 11-ஆம் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NPL Recruitment 2015-2016: 58 Deputy Manager, Plant Engineer, Officer, Semi Skilled (B), & Officer

TNPL Recruitment 2015-2016: 58 Deputy Manager, Plant Engineer, Officer, Semi Skilled (B), & Officer 
 Tamil Nadu Newsprint & Paper Limited (TNPL) has announced a job prospect to appoint Fifty Eight (58) job seekers for the following posts under the TNPL Plants.
Name & Total of Posts:
  1. Semi Skilled (B) (21- Vacancies)
  2. Assistant Manager/ Officer (03- Vacancies)
  3. Officer (IT) (03- Vacancies)
  4. Deputy Manger (IT) (01- Vacancy)
  5. Deputy Manger, Assistant Manager, & Officer (08- Vacancies)
  6. Asst Manger, Plant Engineer (02- Vacancies)
  7. Deputy Manger, Asst Manger, Plant Engineer (02- Vacancies)
  8. Senior Manager (01- Vacancy)
  9. Plant Engineer (01- Vacancy)
  10. Assistant Manger (IT) (01- Vacancy)
  11. Manager (Security Services) (01- Vacancy)
  12. Dy Manager, AM, Officer (Accounts) (14- Vacancies)
Age Bar: Each different post has need to different age limit but commonly the maximum of thirty nine (39) years of age is required for the services of Senior Manager. For others jobs age bar please visit authorized notification, given in last.
Eligibility Norms: Candidates having Graduation | BE, B.TECH | B.Sc. | M.Sc. | Post Graduation | M.TECH | Diploma/Degree in Technology/ Engineering | ME | MCA | M.Sc. | CA | ICWA | MBA | and Equivalent will be eligible.
Application Forms: Candidates can submit an application in the below given specimen after attached photo copies of eligibility documents, DOB, Caste, and passport size photographs to the concerned post wise address (See below given official notification).
Relevant Dates: Candidates can submit their applications till 21st May, 2015.
About TNPL: TNPL was established by Government of Tamil Nadu in the year 1979. Their factory is in Karur district of Tamil Nadu and registered office is in Guindy, Chennai. It is the largest paper unit in India and produces writing paper and newsprint using a special sugarcane residue called bagasse. It started production in the year 1985. It prints paper in an eco friendly way. They have very good technology to produce printing paper and they are of very good standards too. It is oriented to the task of manufacturing and marketing of newsprint and printing and writing papers. One can have a good career prospect here.

Tamil Nadu Newsprint and Paper Limited (TNPL) is announcing a careers prospect to appoint Twelve (12) candidates

TNPL Recruitment 2015-2016: 12 Senior Manager, Deputy Manager and Assistant Manager (Marketing) 
 Tamil Nadu Newsprint and Paper Limited (TNPL) is announcing a careers prospect to appoint Twelve (12) candidates for the designation of as follows in under TNPL posts schedule for Corporate Office and Branches at Chennai. In advance to apply, candidates are required to visit into official advertisement which is mentioned under the last row to get more knowledge about age limit up to, minimum education qualification, way of selection, walk in interview, fee details and others norms, because here we are discussing only short information about TNPL Vacancies 2015.
Name, Age Limit and Total Posts
  1. Senior Manager (Marketing) (05- Vacancies) (Maximum Age 39 Years)
  2. Assistant Manger (Marketing) (04- Vacancies) (Age Below to 29 Years)
  3. Deputy Manager (Marketing) (03- Vacancies) (Age up to 34 Years)
Eligibility Norms: Candidates must have Degree in Arts, Science, Commerce, Engineering with Post Graduation diploma | MBA and Equivalent.
Way to Submit the Application Form: Interested candidates can send the application form to DGM (Corporate Technical Cell), TNPL, Number 67, Mount Road, Guindy, Chennai (Pin Code 600 032) Tamil Nadu along with copies of DOB, Caste, academic, experience and passport size photographs.
Significant Dates: The closing date to submit the details is 21st May, 2015.
TNPL Functions: TNPL production has increased day by day. It has collaborated with various sugar mills too. TNPL’s In-House Research and Development facility is recognized by the Department of Scientific & Industrial Research, New Delhi. It satisfies customers very well and adopts various environment protection measures too for printing paper. Its papers are of very good colour quality and their products are marketed throughout India and exported in countries like UK, Singapore, Nepal, Australia etc. It has received many awards and is registering a very good progress. One can find good job opportunities here which are time to time being given in the website.

Wednesday, 6 May 2015

என்எல்சி நிறுவனத்தில் தட்ச்சர் & கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணி


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தில் நிரப்பப்பட உள்ள 23 தட்டச்சர் & கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Pharmacists Grade-B/Trainee (Grade:w-4)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.10,600 - 29,240

வயதுவரம்பு: 18 - 31க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: D.Pharm படிப்பை முடித்து மத்திய/மாநில பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் மற்றும் கணக்காளர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Technician/Trainee (w-4)

காலியிடங்கள்: 02 (கால் ஊனமுற்றோர், காது கேளாதவர்கள்)

சம்பளம்: மாதம் ரூ.10,600 - 29,240

வயதுவரம்பு: 18 - 31க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் DMLT முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer/Trainee (Grade:w-3)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.10,300 - 28,390

வயதுவரம்பு: 18 - 31க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் முதுநிலை கிரேடு மற்றும் ஆங்கில சுருக்கெழுத்திலி இளநிலை கிரேடு முடித்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பணி: Data Entry Operator/Trainee (Grade: w-4)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.10,600 - 29,240

வயதுவரம்பு: 18 - 31க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: கணினியில் பி.எஸ்சி பட்டம் அல்லது பி.சி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட Data Entry Operator பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant/Typing (Grade: W-3)

காலியிடங்கள்: 05

சம்பளம்: 10,300 - 28,390

வயதுவரம்பு: 18 - 31க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் முதிநிலை கிரேடு பயிற்சியை முடித்திருக்க வேண்டும். கணினியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Receptionist (Grade: w-3)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.10,300 - 28,390

வயதுவரம்பு: 18 - 31க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிரபல நிறுவனங்களில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் பதிவு எண்ணுடன் கிடைக்கும் விண்ணப்பத்தை 2 நகல் பதிவிறக்கம் செய்து அதில் ஒன்றை தங்கள் கைவசம் வைத்துக்கொள்ளவும். மற்றொன்றை தேவையான சான்றிதழ் நகல்களில் சான்று பெற்று கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Deputy General Manager (HR),
Recruitment Cell, Human Resourse Department, Corporate Office, Neyveli Lignite Corporation Limited, Block -01, Neyveli - 607801, Tamilnadu.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.05.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 8 ஆம் தேதி

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 15 ஆவது ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் தனியார் துறை நிர்வாகிகளும், வேலைக்காகக் காத்திருக்கும் பதிவுதாரர்களும் கலந்து கொள்ளும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், வேலைக்கு ஆள்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்து கொள்கிறார்.
இந்த முகாமில் தனியார் துறையில் பணியில் சேரும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படுவதில்லை. அவர்கள் தொடர்ந்து தங்களது பதிவை
புதுப்பித்து வரலாம். அரசு வேலைக்கு பணிமூப்பு வந்தால் அவர்களது பெயரும் பரிந்துரை செய்யப்படும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், சேலம் தெற்கு ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 8 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.
வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள், பணியாளர்கள் எண்ணிக்கை, கல்வித் தகுதி போன்ற விவரங்களை முன்னதாகவே சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை வேலை தேடும் மனுதாரர்களும், வேலையளிப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் க.மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.

கோயில்களில் இரவு நேர காவல் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் இரவு நேர காவல் பணிக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப:
மாவட்டத்தில் திருக்கோயில்களில் இரவு நேர காவல் பணிக்கு, கோயில் காவலர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. 62 வயதுக்குள்பட்ட உடல் ஆரோக்கியமாகவுள்ள முன்னாள் படைவீராóகள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அடைடை ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரார் நல உதவி இயக்குநாó அலுவலகத்துக்கு நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகலாம்.

Tuesday, 5 May 2015

காமராஜர் மணிமண்டபம்: நூலகர், காப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் ஆகிய பணியிடத்திற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜெயஅருள்பதி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இப்பணியிடத்திற்கு ஆதிதிராவிடர்(முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்), முன்னுரிமையற்றவர்( அருந்ததியர் எவரும் இல்லாத பட்சத்தில்) என்ற இனச்சுழற்சி அடிப்படையில் பணியிடம் நிரப்பட உள்ளது. இதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஏதாவது பல்கலைக்கழகத்தில் நூலக தகவல் அறிவியல்(சி.எல்.ஐ.எஸ்) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதற்கு மதாந்தோறும் சம்பளமாக பிபிஐஎரூ.25005000தர ஊதியம் ரூ.500 என்ற விகிதத்தில் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 14-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவை பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் பணி

மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் உதவியுடன் கோவையில் செயல்பட்டு வரும் சலம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள  ஆராய்ச்சிக்கு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientist (Conservation Ecology)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18.05.2015 தேதயின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Life Science, Environmental Science துறைகளில் முனைவர் பட்டம் பெற்று பறவைகள் பற்றிய ஆராய்ச்சி பணியில் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Science (Environmental Impact Assessment)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  Life Science, Environmental Science துறைகளில் முனைவர் பட்டம் பெற்று Environmental Impacts Assessment பணியில் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Salim Ali Centre for Ornithology and Natural History, Anaikatty Post, Coimbatore - 641108
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.05.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sacon.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி

 
புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Personal Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/Admin.1/2015
பணி: Personal Assistant (Group-B)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை தரகப்படும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் ஸ்டேனோகிராபர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து எழுதும் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Finance Officer, JNU, New Delhi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.jnu.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று, டி.டி இணைத்து கீழ்வரும் அஞ்சல்
முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Office of Deputy Registrar (Administration (R & D Cell), Room No: 310, Administrative Block, Jawaharlal Nehru University, New Mehrauli Road, New Delhi - 110067.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jnu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

செயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 80 செவிலியர் டிரெய்னி பணி


செயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 80 செவிலியர் டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Steel Authority of India Limited (SAIL)
பணி இடம்: தமிழ்நாடு
காலியிடங்கள்: 80
பணி: செவிலியர்
தகுதி: செவிலியர் துறையில் டிப்ளமோ அல்லது B.Sc நர்சிங் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.7,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2 சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல் சான்றிதழ்களுடன் 14.05.2015 அன்று நடைபெறுகின்ற நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.05.2015
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ADM Block BGH
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: Sr. Dy. Director (M/A)
நேரம்: காலை 9.00 மணி முதல்
மேலும் விண்ணப்பம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://103.241.144.145/pdf/Walk%20in%20interview.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள 7 இந்தி மொழிபெயர்ப்பாளர் பணி

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள 7 இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Inspector (Hindi Translator)
காலியிடங்கள்: 07
கல்வித்தகுதி: இந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டுகள் மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.4200 என்றி விகிதத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் மாதம் ரூ.9300 - 34800: + தர ஊதியம் ரூ.4600.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy.Inspector General (Estt.) Dte.
Genl ITB Police MHA/Govt. of India
Block-2 CGO Complex Lodhi Road
New Delhi , pincode- 110003.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19112_13_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

எஸ்.எஸ்.சி jobs

2015 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விளம்பர எண்: F.No.3/12/2015-P and P-I
தேதி: 02.05.2015
பணி: குரூப் "பி"
தேர்வுக் கோடு: CGL 2015
1. Assistant
2 . Inspector of Income Tax
3 . Inspector
4 . Asst.Enforcement Officer
5 . Sub-Inspector
6 . Inspector of Posts
7 . Divisional Accountant
8. Statistical Investigator
9 .Sub-Inspector
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34,800
பணி: குரூப் "சி"
10. Auditor
11. Accountant
12. UDC
13. Tax Assistant
14. Compiler
15. Sub-Inspector
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssconline.nic.in/tpform1.php?exam_code=CGL&year=2015&notice_no=F.No.3/12/2015-P%20and%20P-I&notice_date=02-05-2015 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தேசிய உயிரியல் நிறுவனத்தில் பணி

உத்தரப்பிரதேச மாநிலம் (நொய்டா) செயல்பட்டு வரும் தேசிய உயிரியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், விஞ்ஞானி, ஸ்டெனோ, நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist Grade-III
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15600-39100 + தர ஊதியம் ரூ.5400.

பணி: Junior Training Officer
காலியிடங்கள்: 07
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Scientist
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தரஊதியம் 4600

பணி: Administrative Assistant
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Junior Engineer (Electrical)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Stenographer
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Computer Operator
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Administrative Officer, National Institute of Biologicals (Ministry of Health & Family Welfare), A-32, Sector-62, Institutional Area, Noida, U.P., 201309.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சென்று சேர கடைசி தேதி: 01.02.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://nib.gov.in/Advt%20%20%2824.04.2015%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள இரவுக் காவலாளி, ஊர்தி ஓட்டுநர், ஊர்தி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நடமாடும் சிகிச்சைப் பிரிவு ஊர்தி வழங்கப்பட்டுள்ளது.
 இந்த ஊர்தியின் ஓட்டுநர் பணியிடம், ஊர்தி உதவியாளர் பணியிடம் ஆகியன தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடம் முற்றிலும் தாற்காலிகமானது. ஊர்தி ஓட்டுநர் பணியிடத்துக்கு, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, நான்கு சக்கர வாகன உரிமம் பெற்றுள்ள, 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.8 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
ஊர்தி உதவியாளர் பணியிடத்துக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத 18 முதல் 35 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடத்துக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
நிரந்தரப் பணியிடம்: இதேபோல, காலியாக உள்ள இரவுக் காவலர் நிரந்தரப் பணியிடத்துக்கு 8-ஆம் வகுப்பு தோல்வியடைந்த, தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 18 முதல் 32 வயதுக்குள்பட்டவராகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், முன்னுரிமை பெற்ற பிரிவு கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களைப் பெறவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இரும்பு சுரங்கத்தில் 138 பணியிடங்கள்

இந்திய அரசின் பொது துறை நிறுவனமான BAILADILA இரும்பு தாது சுரங்கத்தில் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 02/2015

பணி: Maintenance Assistant Trainee (Mechanical)

காலியிடங்கள்: 114

சம்பளம்: மாதம் ரூ.11,300 - 20,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வெல்டர், மெஷினிஸ்ட், டர்னர், ஷீட் மேகிங், மோட்டார் மெக்கானிக்கல், டீசல் மெக்கானிக், பிட்டர் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.


பணி: Maintenance Assistant Trainee (Electrical)
காலியிடங்கள்: 24

சம்பளம்: மாதம் ரூ.11,300 - 20,200

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில் திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Jt.G.M(Finance), BIOM, Kirandul Complex, Kirandul என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dy.Manager (Personnel) R & P, Balladila Iron ore mine, Kirandul Complex, Kirandul (post), South Bastar Dantewada Dist, Chattisgarth - 494556.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.05.2015
மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.nmdc.co.in/KirandulComplex.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆயுத தொழிற்சாலையில் 210 பணிகள்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் நாக்கூரில் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலையில் நிரப்பப்பட 210 குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Black smith (Semi skilled)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: எலக்ட்ரீசியன்
காலியிடங்கள்: 13
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: Examiner Engineer (Semi Skilled)
காலியிடங்கள்: 92
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: மெஷினிஸ்ட் (Semi Skilled)
காலியிடங்கள்: 75
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Millwright (semi skilled)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.110. இதனை Ordnance Factory Ambajhari Recruitment Fess Fund இல் செலுத்த வேண்டும். அல்லது பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்துவதற்கான
ரசீது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ofajadmin.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ofajadmin.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.