My Blog List

Thursday, 28 January 2016

இளநிலை உதவியாளர் நியமனம்: நாளை கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் 98 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை (ஜன.30) பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
 தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை-6 என்ற முகவரியில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க வரும் தகுதி பெற்றவர்கள், தேர்வாணையத்திலிருந்து பெறப்பட்ட அறிவிப்பு கடிதத்தையும், தேர்வு நுழைவுச் சீட்டையும் எடுத்து வரவேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
 

இந்திய பொருளாதார, புள்ளியியல் பணி தேர்வு: யூபிஎஸ்சி அறிவிப்பு


இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய புள்ளியியல் பணி 2016 தேர்வுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 28
பணி: Indian Economic Service  - 15
பணி: Indian Statistical Service    - 13
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொருளாதாரம், வர்த்தக பொருளாதாரம், போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
புள்ளியியல், கணித புள்ளியியல் பாடங்களை கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது புள்ளியியல், கணித புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ள தேதி: 07.03.2016 - 04.04.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித உற்பத்தி நிறுவனத்தில் (டி.என்.பி.எல்) நிர்வாக பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள பணி

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித உற்பத்தி நிறுவனத்தில் (டி.என்.பி.எல்) நிர்வாக பயிற்சியாளர்கள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager (IT) - 01
பணி: Manager (Finishing House - 01
பணி: Management Trainee(R & D and QC) - 12
பணி: Management Trainee (Plantation) - 04
வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி கணக்கீடப்படும். உச்ச பட்ச வயதில் எம்.பி.சி., பிரிவினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை உள்ளது.
கல்வித் தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., விவசாயத்துறையில் பி.எஸ்சி., அக்ரிகல்சர் அல்லது ஹார்டிகல்சர் அல்லது பாரஸ்ட்ரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (Hr)
Tamil Nadu Newsprint And Papers Limited
Kagithapuram - 639 136,
Karur District, Tamil Nadu .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/hr%20advt%2021jan2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அதாரிடி ஆப் இந்தியா(ஐ.ஆர்.டி.ஏ) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணி

ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பான காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அதாரிடி ஆப் இந்தியா(ஐ.ஆர்.டி.ஏ) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆணையம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மொத்த காலியிடங்கள்: 24
பணி: Junior Officer
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பட்டம் மற்றும் ஏ.சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., எல்.எல்.பி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
எழுத்துத் தேர்வு மையங்கள்: ஐ.ஆர்.டி.ஏ.,வின் இளநிலை அதிகாரி பதவிக்கான தேர்வை தமிழ்நாட்டில் சென்னையிலும், புதுச்சேரியிலும், நாட்டின் பல்வேறு இதர மையங்கள் எழுதலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.irdai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.irdai.gov.in/ADMINCMS/cms/frmGeneral_Layout.aspx?page=PageNo2730&flag=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள இஇஜி, இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய பணி

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள இஇஜி, இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
 இஇஜி இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர்களாக 12 பேரும், ஆடியோமெட்ரிசியன்களாக 17 பேரும், பிராஸ்தடிக் கிராஃப்ட்ஸ்மேன்களாக 64 பேரும், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்டுகளாக 18 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்,
 விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், கல்வித் தகுதிகள் உள்ளிட்டவற்றின் மூலம் நேரடி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வோ, வாய்மொழித் தேர்வோ கிடையாது.
‌w‌w‌w.‌m‌rb.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதளத்தின் மூலமே பிப்ரவரி 10-க்குள் விண்ணப்பிக்க முடியும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய யுரேனியக் கழகத்தில் (Uranium Corporation of India Limited (UCIL)) மேலாண்மை டிரெய்னி

இந்திய யுரேனியக் கழகத்தில் (Uranium Corporation of India Limited (UCIL)) மேலாண்மை டிரெய்னிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 06/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy General Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,000.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Chief Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 41க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Accounts) - 01
சம்பளம்: ரூ.16,400 - 40,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின் 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (EDP) - 02
சம்பளம்: ரூ.16,400 - 40,500.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (CRD) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Personnel) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Accounts) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Environment Engineering) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Control Research & Development) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,400.
வயது வரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50 இதனை ‘Uranium Corporation of India Limited என்ற பெயருக்கு Jaduguda-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ucil.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
General Manager(Pers./IRs.)
Uranium Corporation of India Limited,
(A Government of India Enterprise)
P.O. Jaduguda Mines, Distt.- Singhbhum East,
JHARKHAND-832102
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.2.2016.
மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ucil.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 இளநிலை உதவியளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 இளநிலை உதவியளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்..001/PR33/2016,  தேதி: 13.01.201
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்ற ரீதியில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் Word Processing சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 75
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தங்களது படிப்பை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750. எஸ்சி.,எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை Registrar, Anna University என்ற பெயரில் Chennai-ல் மாற்றத்தக்க வையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http:/www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar,
Anna University,
CHENNAI- 600025.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/JA-ADV-2016.pdf என்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும்.

பதிவுத்துறையில் ஓட்டுநர் பணி

சென்னை பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி ஓட்டுநர்  - 02
சம்பளம்: மாம்தம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம்
வயதுவரம்பு: 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியின் மூலம் 8 வகுப்பு தேர்ச்சி பெற்று மோட்டார் வாகன உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், வாகனம் ஓட்டுவதில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்பப வேண்டிய அஞ்சல் முகவரி:
பதிவுத்துறைத்தலைவரின் நேர்முக பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம்,
எண்.100, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை- 600028
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.02.2016

இந்திய விமான ஆணையத்தில் 200 இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானநிலைய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 200 இளநிலை நிர்வாகி (விமான போக்குவரத்து கட்டுப்பாடு) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.7/2015
பணி: Junior Executive (Air Traffic Control)
காலியிடங்கள்: 200
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் அறிவியல் துறையில் (இயற்பியல் மற்றும் கணிதம்) பி.எஸ்சி பட்டம் அல்லது பொறியியல் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 30.01.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, குரல்வள தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், அலகாபாத், நாக்பூர், அகமதாபாத், குவாகத்தி உள்ளிட்ட பத்து முதன்மை மாநகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: Www.aai.aero என்ற இணையதளத்தில் CAREERS பகுதியை கிளிக் செய்து இரு கட்டங்களாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 04.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aai.ero/employment_news/CORRIGENDUM_advt7-2015-050116.pdf , விண்ணப்பிக்க http://aairectt2015.in/# என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 18 January 2016

மகாராஷ்டிர அரசில் காலியாக உள்ள 339 இளநிலை கணக்காளர் மற்றும் கணக்காளர் உதவியாளர் பணி

மகாராஷ்டிர அரசில் காலியாக உள்ள 339 இளநிலை கணக்காளர் மற்றும் கணக்காளர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior accountant and Accounts assistant
காலியிடங்கள்: 339
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200  -20,200
வயது வரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mcgm.gov.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mcgm.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பொறியியல் டிரெய்னி பணி

தமிழ்நாடு ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் Bharat Heavy Electricals Limited -ல் பொறியியல் டிரெய்னி பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:03/2015
மொத்த காலியிடங்கள்: 200
பணி: Engineer Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
மெக்கானிக்கல் - 115
எலக்ட்ரிக்கல் - 60
எலக்ட்ரானிக்ஸ் - 15
மெட்டாலர்ஜி - 10
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்கள் 29க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெட்டலார்ஜி பிரவுகளில் இளங்கலை அல்லது ஒருங்கிணைந்த 5 வருட முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கட்டணத்தை http://careers.bhel.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2016 தகுதித்தேர்வு மற்றும்  நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Sr.DGM (HRM), Bharat Heavy Electricals Limited, Boiler Auxiliaries Plant, Ranipet - 632401
Tamil Nadu.
ஆன்லைனி்ல் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.02.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அஞ்சல் மூலம் சென்று சேர கடைசி தேதி: 08.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhel.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மேலாண்மை டிரெய்னி பணி

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் Rashtriya Ispat Nigam Limited இரும்பு ஆலையில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவ ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Rectt.Advt.No:01/2016
மொத்த காலியிடங்கள்: 45
பணி: Junior Medical Officer
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி பொது பிரிவினர் 40க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 43க்குள்ளும், மற்ற பிரிவினர் 45க்குள்ளும் இருக்க வேண்டும்.
பணி: Management Trainees (Technical)
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி பொது பிரிவினர் 37க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 40க்குள்ளும், மற்ற பிரிவினர் 42க்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் Mechanical, Electrical, Computer Science துறைகளில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.01.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, பிற சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www/vizagsteel.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

ஒடிசாவில் செயல்பட்டு வரும் National Rice Research Institute-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 03/2015
பணி: Technician (T-1)
காலியிடங்கள்: 42
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
பணி: Technical Assistant (T-3) (Farm Assistant)
காலியிடங்கள்: 22
தகுதி: அக்ரிகல்சர் சம்மந்தமான அறிவியல், சமூக அறிவியல் பிரிவுகளில் பட்டம் பெற்றி்ருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (T-3) (Computer)
காலியிடங்கள்: 01
தகுதி: அக்ரிகல்சர் சம்மந்தமான அறிவியல், சமூக அறிவியல் பிரிவுகளில் பட்டம் பெற்றி்ருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (T-3) (Civil)
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் அல்லது 3 வருட பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (T-3) Engineer (Instruments)
காலியிடங்கள்: 01
தகுதி: மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேசன், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் பட்டம் அல்லது 3 வருட பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (T-3) Engineer (Mechanical)
காலியிடங்கள்: 01
தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் அல்லது 3 வருட பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (T-3) Engineer (Electrical)
காலியிடங்கள்: 01
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் அல்லது 3 வருட பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ICAR Unit:CRRI என்ற பெயரில் Cuttack-ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.crri.nic.in என்ற இணையதளத்தி்ல் கொடுக்கப்பட்டுள்ளவிண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று டி.டி இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகதவரி:
The Senior Administrative Officer, National Rice Research Institute, Cuttack - 753006 (Odisha)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crri.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Heavy Engineering Corporation Limited-ல் காலியாக உள்ள 127 பணி

ராஞ்சியில் உள்ள Heavy Engineering Corporation Limited-ல் காலியாக உள்ள 127 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: RT/31/2015
பணி: Management Trainees Technical
மொத்த காலியிடங்கள்: 105
பிரிவுகள்: Mechanical, Production, Manufacturing, Industrial Engineering
காலியிடங்கள்: 60
பிரிவுகள்: Electrical, EEE, Electronics & Tele Communication
காலியிடங்கள்: 26
பிரிவுகள்: Instrumentation
காலியிடங்கள்: 02
பிரிவுகள்: Metallurgy
காலியிடங்கள்: 12
பிரிவுகள்: Civil
காலியிடங்கள்: 05
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் B.E அல்லது B.Tech அல்லது AMIE முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2015 நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி: Management Trainees (Non-Technical)
மொத்த காலியிடங்கள்: 22
பிரிவு: HR
காலியிடங்கள்: 10
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ (எச்ஆர்), Soc ial Work பிரிவில் முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: Finance
காலியிடங்கள்: 10
தகுதி: CA, ICWA பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Law
காலியிடங்கள்: 02
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: ராஞ்சி
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 29க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hecltd.com/career என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hecltd.com/career என்ற இணையதளத்தை பார்க்கவும்.

குரூப் சி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டல பொறியியல் பிரிவில் (Military Engineering Service Eastern Command) காலியாக உள்ள 480 குரூப் சி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 480
பணி: Trandesman Mate
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 13.02.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician,Refrigerator Mechanic & Air Conditioning,Fitter General Mechanic, Vehicle Mechanic, Pipe Fitter, Carpenter, Painter போன்ற தொழிற்பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு, தொழிற்திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mes.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சுய சான்று செய்த தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் 50 ரூபாய் தபால் தலை ஒட்டப்பட்ட 28 X 12 செ.மீ. அளவு உள்ள சுயமுகவரி எழுதப்பட்ட அஞ்சல் கவர் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mes.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்திய ராணுவத்தில் (Territorial Army) பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய ராணுவத்தில் (Territorial Army) பணிபுரிய முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Territorial Army Officer
வயதுவரம்பு: 18 - 42க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு 2016 ஏப்ரல் 2016 மாதம் நடைபெறும்.
சம்பளம்: ராணுவத்தில் நிரந்தர அலுவலக பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும்.
பயிற்சி காலம்: 1 ஆண்டு. பின்னர் ஒவ்வொரு வருடமும் 2 மாதங்கள் Traning Camp நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட கல்வி, மருத்துவச் சான்று, அடையாள அட்டை, முகவரி சான்று, பிறப்பு சான்று, NOC சான்று, ஒய்வு பெற்ற சான்று, PAN கார்டு போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வின்போது  குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் அசல், நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Directorate General TA, Integrated HG of MoD (Army), "L" Block, Church Road, New Delhi - 01
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2016
மேலும் விவரங்கள் அறிய  www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 6 January 2016

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கிளையை மதுரையில் தொடங்க வேண்டும் என கோரிக்கை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கிளையை மதுரையில் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வாணையம் மொத்தம் 112 பிரிவுகளில் சுமார் 600 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது.
இப்போது சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு என அனைத்துக்கும் தேர்வர்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
 இதனால் தேர்வு எழுதுபவர்களுக்கு செலவு அதிகமாவதோடு, காலவிரயமும் ஏற்படுகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மதுரையில் இந்த தேர்வாணையத்தின் கிளை அலுவலகத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதுவோர் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் பட்டு வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணி

சேலம் பட்டு வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
  இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் கேட்டுக்கொண்டதன்படி, இளநிலை உதவியாளர் (பட்டு வளர்ச்சி) பணிக்கு, மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பதிவு மூப்பு மற்றும் தகுதியுடைய பதிவுதாரர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
  கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழை பதிவு செய்தவராகவும் அல்லது பட்டுப்புழு வளர்ப்பில் குறைந்தது 6 மாத முன் அனுபவச் சான்று பெற்று அதையும் பதிவு செய்தவராகவும் இருக்கவேண்டும். இவையிரண்டும் இல்லையெனில், ஓசூர் பட்டு வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில் 6 மாத காலப் பயிற்சி பெற்ற சான்றிதழை பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பைப் பொருத்தவரை, கடந்த 1.7.2015 அன்று அனைத்துப் பிரிவினருக்கும் 18 முதல் 57 வயது வரையும், பொதுப் பிரிவினராக இருந்தால் 18 முதல் 30 வரையும் உள்ளவராக இருக்க வேண்டும்.
  இத் தகுதிகளையுடைய பதிவுதாரர்கள், பட்டு வளர்ச்சித் துறையில் இளநிலை ஆய்வாளர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட இருப்பதால், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தங்களது வேலைவாய்ப்புப் பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்துச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து, பரிந்துரைப் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள புல உதவியாளர் பணி

மதுரை மாவட்டத்தில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள புல உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
 புல உதவியாளர் பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனசுழற்சி அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இப்பணியிடத்துக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18-லிருந்து 35 வயதுக்குள், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் 18-லிருந்து 32 வயதுக்குள், இதர பிரிவினர் 18-லிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 2015 ஜூலை 1 ஆம் தேதி தகுதி நாளாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பத்தாம் வகுப்பு தவறியவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
 மேற்குறிப்பிட்ட தகுதிகளை உடையவர்கள் தங்களது பெயர், முகவரி, கல்வித் தகுதி, பிறந்த தேதி உள்ளிட்டவை அடங்கிய சுயவிவரக் குறிப்புடன் விண்ணப்பிக்க வேண்டும். வயது, முகவரி, கல்வித் தகுதி, சாதி, முன்னுரிமை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவற்றுக்கான ஆவணங்களின் நகல்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
 உதவி இயக்குநர், நில அளவை பதிவேடுகள் துறை, பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக
வளாகம், அண்ணா பேருந்து நிலையம் அருகில், மதுரை - 625020 என்ற முகவரிக்கு ஜன.29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேதி தபால் மூலம் தெரிவிக்கப்படும் என்றார்.

உதவிப் பொறியாளர் (சிவில்) தேர்வுக்கான நேர்காணல்

உதவிப் பொறியாளர் (சிவில்) தேர்வுக்கான நேர்காணல் வரும் 11-ல் தொடங்குகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
உதவிப் பொறியாளர் (சிவில்) பிரிவில் 213 இடங்கள் காலியாகவுள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பரில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு-நேர்காணல் ஆகியன வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பிரிவில் 24 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இப்போது, சான்றிதழ் சரிபார்ப்புக்கு 57 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வு வரும் 27 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

கோவா கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள கூடுதல் பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற பல்வேறு பணி

கோவா கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள கூடுதல் பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.05/2015
மொத்த காலியிடங்கள்: 13
பணி: Additional General Manager (Naval Architecture) - 01
பணி: Additional General Manager/Dy.General Manager (IT) - 01
பணி: Dy.General Manager /Sr.Manager(Medical) - 01 பணி: Sr.Manager(PR) - 01
பணி: Dy.General Manager/Asst.Manager (Naval Architecture) - 02
பணி: Dy.Manager (Civil) - 02,
பணி: Assistant Manager (Finance) - 02
பணி:  Assistant Manager (HR) - 03
வயதுவரம்பு: 30.11.2015 தேதியின்படி கணக்கிடப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் Naval Architecture, Computers, IT, Electrical, Electronics, Mechanical Instrumentation பிரிவுகளில் BE படிப்புடன் 12 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.goashipyard.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief General Manager (HR & A),
Dr. B.R.Ambedkar Bhavsan, Goa Shipyard Limited, Vasco-Da-Gama, Goa - 403802.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.goashipyard.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்தியன் ஆயில் -குரூப் -IV பணி

இந்திய அரசின்கீழ் செயல்பட்டும் வரும் இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள குரூப் -IV பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். BR/RECTT/OR/2015
மொத்த காலியிடங்கள்: 38
பணி: Junior Engineering Assistant-IV (Production) - 16
பணி: Junior Engineering Assistant-IV (P&U)- Boileri - 09
பணி: Junior Engineering Assistant-IV (Production) - Operations, Junior Engineering Assistant-IV (Electrical), Junior Control Room Operator-IV - 10
பணி: Junior Engineering Assistant-IV (Fire & Safety) - 03
தகுதி: பொறியியல் துறையில் Chemical, Refinery & Petrochemical, Mechanical, Electrical பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள், விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Human Resource Manager, Barauni Refinery, Indian Oil Corporation Limited, P.O: Barauni Oil Refinery, Distt. Begusari, pin Code- 851 114
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2016

சென்னை மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் காலியாக உள்ள மின் உதவியாளர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் காலியாக உள்ள மின் உதவியாளர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: மின் உதவியாளர் (Electrical Assistant)
காலி இடங்கள்: 1
இன சுழற்சி: ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்)
பணியிடம்: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை மாவட்டம்
தகுதிகள்:
1. SSLC passed
2. ITI Certificate Electrical (2 year duration obtained from any recognized institution)
அனுபவம்:
1. Experience for a period of 3 years as Electrician or as Maintenance Assistant from any reputed firm
2. Must have eperience in operating and maintaining the Generator
வயது வரம்பு: 01.07.2015 அன்றுள்ளவாறு 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக 5-வது தளம், 62, ராஜாஜி சாலை, சென்னை - 600 001
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:
மனுதாரரின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவத் தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விணப்பப்படிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் 18.01.2016 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

Monday, 4 January 2016

TNPSC model Question

மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 254 பணி

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கோன மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 254 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: LMRC/HR/Rectt/O&M/1/2015
பணி: Assistant Manager/Accounts (E01)
காலியிடங்கள்: 01
பணி: Station Controller Cum Train Operator (SCTO) (NE01)
காலியிடங்கள்: 97
பணி: Customer Relations Assistant (CRA) (NE 02)
காலியிடங்கள்: 26
பணி: Junior Engineer (Electrical) (NE 03)
காலியிடங்கள்: 38
பணி: Junior Engineer (S&T) (NE 04)
காலியிடங்கள்: 16
பணி: Junior Engineer (Civil) (NE 05)
காலியிடங்கள்: 16
பணி: Office Assistant (HR) (NE 06)
காலியிடங்கள்: 02
பணி: Account Assistant (NE 07)
காலியிடங்கள்: 03
பணி: Maintainer (Electrical) (NE 08)
காலியிடங்கள்: 29
பணி: Maintainer (S&T) (NE 09)
காலியிடங்கள்: 12
பணி: Maintainer (Civil) (NE 10)
காலியிடங்கள்: 14
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான விவரங்கள் அறிய இணையதளத்தை பார்க்கக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.lmrcl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.lmrcl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்

தமிழக அரசு சார்பில் 25 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசு சார்பில் 25 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கோவை, ஓசூர், ஈரோடு, திருப்பூர், சேலம், சென்னையிலிருந்து 500-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. அனுமதி இலவசம்.
மொத்த தேர்வு செய்யப்பட உள்ள காலியிடங்கள்: 25,000
நிறுவனங்கள்: IT Software, Core, BPO, Marketing, IT Hardware உள்பட் பல்வேறு துறைகளை சார்ந்த மிகப்பெரிய 500க்கும் மேற்பட்ட முன்னோடி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் படித்த இளைஞர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி: 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக், பி.எஸ்சி, பி.காம், பி.ஏ, பி.பி.ஏ, எம்.எஸ்சி, எம்சிஏ, எம்பிஏ, எம்.இ, எம்.டெக், மருத்துவம் சார்ந்த படிப்புகள், கணினி பயிற்சி போன்ற எந்தவொரு துறையில் பட்டயம், பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.2016 அன்று காலை 8 மணி முதல் மாலை 6.15 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Sri Krishna College of Engineering and Technology,
Palakkad main Road, Kuniamuthur, Coimbatore, Tamil Nadu - 641 008.

பண அச்சடிப்பு அலுவலகத்தில் பல்வேறு பிரிவில் காலியாக உள்ள சூப்பரவைசர் பணி

மத்திய பிரதேச மாநிலம் திவாஸ் நகரில் செயல்பட்டு வரும் ‘பேங்க் நோட் பிரஸ்’ எனப்படும் பண அச்சடிப்பு அலுவலகத்தில் பல்வேறு பிரிவில் காலியாக உள்ள சூப்பரவைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 41
பணி: சூப்பரவைசர்
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஐ.டி., சிவில், ரெப்ரிஜிரேட்டர் அண்ட் ஏ.சி. போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  இணையதளத்தை பார்க்கவும்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.)

மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.), நிரப்பப்பட உள்ள 30 சீனியர் ரெசிடென்ட், ஜூனியர் ரெசிடென்ட் போன்ற பணியிடங்களுக்கு  வரும் 6 ஆம் தேதி நேரடி நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பப்படுகிறார்கள்.
பணி: சீனியர் ரெசிடென்ட், ஜூனியர் ரெசிடென்ட்
காலியிடங்கள்: 22
பணி: லேப் டெக்னீசியன், டயாலிசிஸ் போன்ற ரிட்டயர்டு பாராமெடிக்கல் பெர்சனல் பணி
காலியிடங்கள்: 08
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com   இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள கெமிக்கல் எக்ஸாமினர், ஸ்பெஷலிஸ்ட், அசோசியேட் பேராசியர் உள்ளிட்ட 22 பணி

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள கெமிக்கல் எக்ஸாமினர், ஸ்பெஷலிஸ்ட், அசோசியேட் பேராசியர் உள்ளிட்ட 22 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 22
பணி: Chemical Examiners Grade-I
பணி: Junior Scientific Officers (Physics)
பணி: Junior Scientific Officer (Toxicology)
பணி: Assistant Director Grade-I (Non-Technical)
பணி: Assistant Editors (English)
பணி: Associate Professor (Arabic)
தகுதி: எம்.எஸ்சி. அக்ரிகல்சர், அரபி மொழியில் பிஎச்.டி. முடித்தவர்கள், வேதியியல், இயற்பியல், உயிர்இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in   என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2016
மேலும் வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 37 பேராசிரியர், இணை பேராசிரியர் பணி

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 37 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 37
பணி: பேராசிரியர், இணை பேராசிரியர்
உயர்கல்வித்துறையின் கடித எண் 2(டி) எண் 58 நாள் 19.4.2002ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஒரு துறையின் ஒவ்வொரு பணிநிலையும் தனித்தனி  பிரிவாக கருதியும், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 206 நாள் 6.11.2008-இன் படியும்,  இடஒதுக்கீடு மற்றும் இனவாரி சுழற்சி முறை பின்பற்றப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான அருந்ததியர் பணியிடம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 65 நாள் 27.5.2009-இன் படி ஒதுக்கீடு ́செய்யப்பட்டுள்ளது. அருந்ததியரில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இப்பணியிடங்களுக்கு கருதப்படுவர்.
விண்ணப்பப் படிவம், PBAS படிவம், கல்வித்தகுதிகள் மற்றும் சிறப்புக் கல்வித்தகுதிகளைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் தொடர்பான விவரங்களுக்கு பல்கலைக்கழக நல்கைக்குழு இணைய தளத்தினை (www.ugc.ac.in) பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்  ரூ.500/- க்கான (தாழ்த்தப்பட்ட வகுப்பு எனில் ரூ.300/-) வரைவோலை “பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்” என்ற பெயரில் எடுக்கப்பட்டு  இணைக்கப்பட வேண்டும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அதன் இணைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்   20.1.2016.  ஏற்கனவே பணியில் உள்ளோர் பணியாற்றும் நிறுவனம் வழி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
கல்விநிலைப் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக ஏற்கெனவே பல்கலைக்கழகத்தால்  வெளியிடப்பட்ட விளம்பரங்கள் ந.க.எண் அ1/2609/2012  நாள் 12.8.2013  மற்றும்  ந.க.எண் அ1/2609/2012 நாள்:19.12.2013 ஆகியன திரும்ப பெறப்ப ́கிறது. செலுத்தப்பட்ட விண்ணப்பக்கட்டணம் உரியவர்களுக்கு மீள அளிக்கப்படும்.
குறிப்பு:
நேர்காணலில்  மேற்குறித்த அவ்வவ் பதவிகளுக்கான தகுதி நிலையில் விண்ணப்பதாரர்கள் முழுநிறைவு அளிக்காத நிலையில் அவ்வவ் பதவிகளுக்குக் கீழ்நிலையில் உள்ள பதவிகளுக்கே நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கருதப்படுவார்கள்.
மேற்குறிப்பிடப்பட்ட பணியிடங்களை நிரப்புவது அல்லது நிரப்பாமல் இருப்பதற்கான உரிமை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.
ஒரு பதிவிக்கும் கூடுதலாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் தனித்தனியே விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
மேலும் கல்வித்தகுதி, தேர்வு முறைகள் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamiluniversity.ac.in/tamil/wp-content/uploads/2016/01/application-form.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

தேசிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக 94 பணி

மத்திய அரசின் தகவல்தொடர்பு அமைச்சகம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தேசிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக 94 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி ச காலியிடங்கள் விவரம்:
பணி: துணை இயக்குநர் (சட்டம்) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.

பணி: உதவி இயக்குநர் (டிபி) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
பணி: உதவி இயக்குநர் (நிதி) - 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
பணி: உதவி இயக்குநர் (நிர்வாகம்) - 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
பணி: நிதி அதிகாரி - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
பணி: நிர்வாக அதிகாரி - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
பணி: சீனியர் அசிஸ்டென்ட் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பணி: நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பணி: அலுவலக ஆலோசகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பணி: அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
பணி: அசிஸ்டென்ட் - 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
பணி: ஸ்டெனோகிராபர் - 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
பணி: ஜூனியர் அசிஸ்டென்ட் - 13
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
பணி: சயின்டிஸ்ட் ‘டி’ - 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.
பணி: சயின்டிஸ்ட் ‘சி’ - 07
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
பணி: சயின்டிஸ்ட் ‘சி’ (மார்க்கெட்டிங்) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
பணி: சயின்டிஸ்ட் ‘பி’ - 20
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 16
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
பணி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
விண்ணப்பிக்கும் முறை: http://recruitment.nielit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2016
மேலும் கல்வித் தகுதி, முன் அனுபவம், வயது வரம்பு சலுகை, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.nielit.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வங்கிகளில் எழுத்தர், துணைநிலை அலுவலர்கள் நேர்முகத் தேர்வு ரத்து

எழுத்தர், துணைநிலை அலுவலர்கள் பணியிட நேர்முகத் தேர்வை ரத்து செய்யும்படி பொதுத் துறை வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசுத் துறைகளில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு நிலையிலான பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய நிதியமைச்சக செயலர் தலைமையில், செயலர்கள் நிலையிலான கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளில் கீழ்நிலை அளவிலான பணியிடங்களுக்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி, எழுத்தர், துணை நிலை அலுவலர்கள் நிலையிலான பணியிடங்களுக்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி,
பொதுத் துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
அதற்குப் பதிலாக, சைக்கோ மெட்ரிக் தேர்வு உள்ளிட்டவற்றைச் சேர்த்து எழுத்துத்தேர்வை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயும்படி பொதுத்துறை வங்கிகள் அறிவுறுத்தபடுகின்றன என்று அந்த சுற்றறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, மத்தியப் பணியாளர் நலன், பயிற்சித்துறை அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும், திறனறித் தேர்வு அல்லது உடல் தகுதித் தேர்வு தொடர்ந்து நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. குறிப்பிட்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்துவது அவசியம் என்று சம்பந்தப்பட்ட துறை விரும்பும்பட்சத்தில், அதுகுறித்து மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறைக்கு விரிவாக அறிக்கை அனுப்பி அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது

Sunday, 3 January 2016

மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் பணி

தமிழ் நாடு ஜெனரேஷன் அண்டு டிஸ்டிரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நம்மால் டான்ஜெட்கோ என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் நாடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட கால கிராஜூவேட் அப்ரென்டிஸ்ஷிப் பயிற்சியை டி.என்.இ.பி., டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ வாயிலாக முடித்தவர்களும் இந்தப்
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிட விபரம்: எலக்ட்ரிகல் துணைப் பொறியாளர் பதவியில் 300 இடங்களும், மெக்கானிகல் துணைப் பொறியாளர் பிரிவில் 25 இடங்களும், துணைப் பொறியாளர் சிவில் பிரிவில் 50 இடங்களும் சேர்த்து மொத்தம் 375 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எலக்ட்ரிகல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இ.இ.இ., இ.சி.இ., இ.ஐ.இ., சி.எஸ்.இ., ஐ.டி., போன்ற ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பையோ முடித்திருக்க வேண்டும். அதே போல் சிவில் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சிவிலில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பையும், மெக்கானிக்கலுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே பிரிவில் பட்டப் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். இப்பிரிவுகளுக்கு ஏ.எம்.ஐ.இ., செக்சன் ஏ மற்றும் பி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியறிவு கட்டாயம் தேவை.
விண்ணப்பக் கட்டணம்: டான்ஜெட்கோவின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.250/- மட்டும் செலுத்தினால் போதுமானது. முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டின் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், விழுப்புரம், ஈரோடு, திரு நெல்வேலி ஆகிய மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 11.01.2016
இணையதள முகவரி: http://www.tangedco.gov.in/index1.php?tempno=1

பாரத் பெட்ரோலிய நிறுவனம் காலியாக உள்ள நிர்வாகப் பயிற்சியாளர் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பி.பி.சி.எல்., என்று அறியப்படும் பாரத் பெட்ரோலிய நிறுவனம் பார்சூன் 500 நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுள் இந்த நிறுவனமும் முக்கியமான ஒன்றாகும். 1976ல் தேசியமயமாக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்சமயம் நமது நாட்டின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பயிற்சியாளர் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்கள் கேட் 2016 தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவுகள்: மெக்கானிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பிரிவுகளில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.06.2016 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் படிப்பை முழு நேரப் படிப்பாக தொடர்புடைய பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: பல்வேறு நிலைகளிலான தேர்ச்சி முறை மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேட் 2016 மதிப்பெண்கள் முக்கியமான ஒன்றாகும்.
பணியின் தன்மை: ஒரு வருட கால புரொபேஷன் காலம் வரை பயிற்சியும், அதன் பின்னர் நிரந்தரப் பணியமைவும் இருக்கும்.
கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.01.2016
கேட் தேர்வு நடைபெறும் நாள்: 30.01.2016 முதல் 07.02.2016க்குள்
இணையதள முகவரி: www.bpclcareers.in/careers-bpcl.aspx

கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணி

பொதுத் துறை வங்கிகளுள் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: டெக்னிக்கல் அதிகாரி எலக்ட்ரிகல் - 14
பணி: டெக்னிக்கல் பீல்ட் அதிகாரி - 10
பணி: டெக்னிகல் பீல்ட் அதிகாரி மெக்கானிகல் - 6
பணி: நெட்வொர்க் நிர்வாகம் - 6
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.01.2016
மேலும் தகுதி, அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.canarabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிரிண்டிங் டெக்னாலஜிஸ்ட்ஸ், எலக்ட்ரீசியன்ஸ், மெக்கானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் பயிற்சியாளர்கள் பதவி

1923ல் தற்போது வங்கதேச வசமுள்ள பரிசாலில் சரஸ்வதி பிரஸ் நிறுவப்பட்டது. தேசியவாத எழுத்து வடிவங்களை வெளியிடுவதில் ஈடுபட்டு வந்த இந்த அச்சகம் பின்னாட்களில் கோல்கட்டாவிற்கு மாற்றப்பட்டு அன்று முதல் இன்று வரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அச்சகத் தொழிலில் நாடு தழுவிய அளவில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி பிரஸ் லிமிடெட் நிறுவனத்தில் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட பிரிவுகள்: சரஸ்வதி பிரஸ் லிமிடெட் நிறுவனத்தில் பிரிண்டிங் டெக்னாலஜிஸ்ட்ஸ், எலக்ட்ரீசியன்ஸ், மெக்கானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் பயிற்சியாளர்கள் பதவி நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2016 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பிளஸ் ௨ விற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு மூன்று ஆண்டுகாலம் படிக்கக்கூடிய டிப்ளமோ படிப்பான பிரிண்டிங் டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ., சி.டி.ஐ., படிப்பை எலக்ட்ரீசியன் அண்டு மெக்கானிக்கலில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக் காலம்: எவ்வளவு: சரஸ்வதி பிரஸ் வழங்கும் பயிற்சியுடன் கூடிய இந்த வாய்ப்பு மூன்று ஆண்டுகாலத்திற்கானது.
ஸ்டைபண்டு எவ்வளவு: மாதம் ரூ.7 ஆயிரத்துடன் இந்தப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்கள் முழுமையான பயோ-டேடா படிவத்துடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Managing Director, Saraswathy Press Limited, 11, B.T. Road, Belgharia, Kolkata - 700 056.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.01.2016
இணையதள முகவரி: http://saraswatypress.com/appointment.php

சிட்பி எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணி

சிட்பி எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 100
பணி: உதவி மேலாளர்
வயதுவரம்பு: 21.12.2015 தேதியின்படி 21 - 28க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை டெபிட் கார்ட், இன்டர்நெட் பாங்கிங், விசா, மாஸ்டர் போன்ற கார்டுகள் மூலமாக ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.sidbi.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sidbi.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி

தமிழக அரசின் 1 (TN) BN NCC. Chennai அலுவலத்தில் காலியாக உள்ள பண்டக பணியாளர் காலி பணியிடம் இன சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/APPT/2015 1(TN) BN NCC, Chennai.  தேதி: 02.01.2016
பணி: பண்டக பணியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.4800 - 10000 + தர ஊதியம் ரூ.1,400
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்த பணியிடம் தாழ்த்தப்பட்டவர் (அருந்ததியர்) (Scheduled Caste (A)) முன்னுரிமை பெற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 35 வயது அல்லது அதற்கும் குறைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் 40 வயது அல்லது குறைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை வெள்ளைத்தாளில் விண்ணப்பதாரரின் முழு முகவரி, வயது, கல்வித்தகுதி, இனம்/ உட்பிரிவு மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு எழுதி அனுப்ப வேண்டும்.
இதற்கென விண்ணப்ப படிவம் எதுவம் வழங்கப்படமாட்டாது.
கல்வி, சாதிச் சான்று, குடியிருப்புச் சான்று, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, இதரச் சான்று மற்றும் முன்னுரிமை பெற்றவர் என்பதற்கான சான்றுகளின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை உண்மை. தேர்விற்கு முன்போ அல்லது பிறகோ இவ்விவரங்கள் தவறு என அறியவரும் பட்சத்தில் என்மீது தேர்வுக்குழு எடுக்கும் எவ்வித நடவடிக்கைக்கும் உட்படுகிறேன். மேலும் போட்டிக் தேர்வுக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளேன் என உறுதி கூறுகிறேன், என விண்ணப்பத்தின் இறுதியில் தனது கைப்பட எழுதி கையொப்பமிட்டு விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை 22.01.2016 அன்று பிற்பகல் 4 மணிக்குள் Commanding Officer 1 (TN) BN NCC.No.32, Gengu Road, Egmore, Chennai-08  என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலக் கொடுவிற்கு பின்னப் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் வீடியோ ஒளிப்பதிவாளர் பணி

தமிழ்நாடு திரைப்படப் பிரிவில் காலியாக உள்ள 1 வீடியோ ஒளிப்பதிவாளர் (Video Cameraman) பணியிடம் மற்றும் மேதகு ஆளுநர் மாளிகையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை யால் புதியதாக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ ஒளிப்பதிவாளர் பணியிடம் ஆகியவற்றை நிரப்ப இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வீடியோ ஒளிப்பதிவாளர் (Video Cameraman)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,500
இன சுழற்சி முறை: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமை பெற்றவர்), ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (முன்னுரிமை பெற்றவர்)
பணி இடம்: தமிழ்நாடு திரைப்படப் பிரிவு, தரமணி, சென்னை -113, மேதகு ஆளுநர் மாளிகை, கிண்டி, சென்னை -22
தகுதி: ஒளிப்பதிவு(Cinematography) அல்லது ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல் (Sound Recording & Sound Engineering)  பிரிவில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட திரைப்பட தொழில்நுட்ப பட்டயம் (A Diploma in Filim Technology (Cinematography or Sound Recording & Sound Engineering) அல்லது பூனாவில் அமைந்துள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒளிப்பதிவு அல்லது ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல் பிரிவில் பட்டயம் (மற்றும்) ஆவணப் பட தயாரிப்பு (அல்லது) செய்தி ஆவனப்படம், தொலைக்காட்சிப் படம் மற்றும் விளம்பரப்படங்கள் தயாரிக்கும் வீடியோ தயாரிப்பு நிறுவனத்தில் ஒளிப்படத் தொகுப்பில் Umatic ஒளிப்பதிவு கருவியை கையாள்வதில் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு வயதுவரம்பு இல்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2016 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
குறிப்பு: முன்னுரிமை பெற்ற நபர்களிடமிருந்து போதுமான விண்ணப்பங்கள் பெறப்படவில்லை எனில் முன்னுரிமை அற்றவர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்