My Blog List

Sunday, 3 January 2016

பாரத் பெட்ரோலிய நிறுவனம் காலியாக உள்ள நிர்வாகப் பயிற்சியாளர் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பி.பி.சி.எல்., என்று அறியப்படும் பாரத் பெட்ரோலிய நிறுவனம் பார்சூன் 500 நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுள் இந்த நிறுவனமும் முக்கியமான ஒன்றாகும். 1976ல் தேசியமயமாக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்சமயம் நமது நாட்டின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பயிற்சியாளர் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்கள் கேட் 2016 தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவுகள்: மெக்கானிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பிரிவுகளில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.06.2016 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் படிப்பை முழு நேரப் படிப்பாக தொடர்புடைய பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: பல்வேறு நிலைகளிலான தேர்ச்சி முறை மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேட் 2016 மதிப்பெண்கள் முக்கியமான ஒன்றாகும்.
பணியின் தன்மை: ஒரு வருட கால புரொபேஷன் காலம் வரை பயிற்சியும், அதன் பின்னர் நிரந்தரப் பணியமைவும் இருக்கும்.
கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.01.2016
கேட் தேர்வு நடைபெறும் நாள்: 30.01.2016 முதல் 07.02.2016க்குள்
இணையதள முகவரி: www.bpclcareers.in/careers-bpcl.aspx

No comments:

Post a Comment