அரசு மருத்துவமனைகளில்
காலியாகவுள்ள இஇஜி, இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய பணியிடங்களுக்கு
தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு
ஆணையம் தெரிவித்துள்ளது.
இஇஜி இஎம்ஜி தொழில்நுட்ப வல்லுநர்களாக 12 பேரும்,
ஆடியோமெட்ரிசியன்களாக 17 பேரும், பிராஸ்தடிக் கிராஃப்ட்ஸ்மேன்களாக 64
பேரும், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்டுகளாக 18 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்,
விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், கல்வித் தகுதிகள்
உள்ளிட்டவற்றின் மூலம் நேரடி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வோ,
வாய்மொழித் தேர்வோ கிடையாது.
www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின்
மூலமே பிப்ரவரி 10-க்குள் விண்ணப்பிக்க முடியும். நேரடி விண்ணப்ப விநியோகம்
கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment