My Blog List

Wednesday, 6 January 2016

சேலம் பட்டு வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணி

சேலம் பட்டு வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
  இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் கேட்டுக்கொண்டதன்படி, இளநிலை உதவியாளர் (பட்டு வளர்ச்சி) பணிக்கு, மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பதிவு மூப்பு மற்றும் தகுதியுடைய பதிவுதாரர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
  கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழை பதிவு செய்தவராகவும் அல்லது பட்டுப்புழு வளர்ப்பில் குறைந்தது 6 மாத முன் அனுபவச் சான்று பெற்று அதையும் பதிவு செய்தவராகவும் இருக்கவேண்டும். இவையிரண்டும் இல்லையெனில், ஓசூர் பட்டு வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில் 6 மாத காலப் பயிற்சி பெற்ற சான்றிதழை பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பைப் பொருத்தவரை, கடந்த 1.7.2015 அன்று அனைத்துப் பிரிவினருக்கும் 18 முதல் 57 வயது வரையும், பொதுப் பிரிவினராக இருந்தால் 18 முதல் 30 வரையும் உள்ளவராக இருக்க வேண்டும்.
  இத் தகுதிகளையுடைய பதிவுதாரர்கள், பட்டு வளர்ச்சித் துறையில் இளநிலை ஆய்வாளர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட இருப்பதால், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தங்களது வேலைவாய்ப்புப் பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்துச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து, பரிந்துரைப் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment