My Blog List

Wednesday, 6 January 2016

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கிளையை மதுரையில் தொடங்க வேண்டும் என கோரிக்கை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கிளையை மதுரையில் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வாணையம் மொத்தம் 112 பிரிவுகளில் சுமார் 600 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது.
இப்போது சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு என அனைத்துக்கும் தேர்வர்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
 இதனால் தேர்வு எழுதுபவர்களுக்கு செலவு அதிகமாவதோடு, காலவிரயமும் ஏற்படுகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மதுரையில் இந்த தேர்வாணையத்தின் கிளை அலுவலகத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதுவோர் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment