சிட்பி எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி வங்கியில்
காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 100
பணி: உதவி மேலாளர்
வயதுவரம்பு: 21.12.2015 தேதியின்படி 21 - 28க்குள்
இருக்க வேண்டும். வயது வரம்பில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு
விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை டெபிட் கார்ட்,
இன்டர்நெட் பாங்கிங், விசா, மாஸ்டர் போன்ற கார்டுகள் மூலமாக ஆன்லைன்
மூலமாகவே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sidbi.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sidbi.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
No comments:
Post a Comment