My Blog List

Friday, 15 May 2015

ராஷ்ட்ரீய இஸ்பாட் நிகாம் நிறுவனத்தில் டெக்னிகல் வேலை

இந்தியாவின் இரும்பு உற்பத்தித் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற விசாகப்பட்டினம் ஸ்டீல் லிமிடெட் நிறுவனம் நவரத்தினா பொதுத்துறை நிறுவனங்களுள் முக்கியமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் நிறுவனமான ராஷ்ட்ரீய இஸ்பாட் நிகாம் நிறுவனம் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனத்தில் டெக்னிகல் பிரிவில் ஆபரேட்டர் கம்டெக்னீசியன் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகளும் காலியிடங்களும்: ராஷ்ட்ரீய இஸ்பாட் நிகாம் நிறுவனத்தின் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னி காலியிடங்கள் கெமிக்கலில் 11ம், எலக்ட்ரிகலில் 114ம், மெக்கானிகலில் 225ம் நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.04.2015 அடிப்படையில் விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினரின் வயது 27க்குள்ளும், ஓ.பி.சி., பிரிவினரின் வயது 30க்குள்ளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரின் வயது 32க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 01.04.2015 அடிப்படையில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு கெமிக்கல், எலக்ட்ரிகல், மெக்கானிகல் ஆகிய இன்ஜினியரிங் பிரிவு ஏதாவது ஒன்றில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சார்ந்திருக்கும் பிரிவில் தேர்வு இருக்கும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.300/-ஐ இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியின் RINL Recruitment Account No. 30589461220ல் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.06.2015
இணையதள முகவரி: http://www.vizagsteel.com/myindex.asp?tm=9&url=code/tenders/viewjobads.asp

No comments:

Post a Comment