My Blog List

Wednesday, 6 May 2015

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 8 ஆம் தேதி

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 15 ஆவது ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் தனியார் துறை நிர்வாகிகளும், வேலைக்காகக் காத்திருக்கும் பதிவுதாரர்களும் கலந்து கொள்ளும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், வேலைக்கு ஆள்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்து கொள்கிறார்.
இந்த முகாமில் தனியார் துறையில் பணியில் சேரும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படுவதில்லை. அவர்கள் தொடர்ந்து தங்களது பதிவை
புதுப்பித்து வரலாம். அரசு வேலைக்கு பணிமூப்பு வந்தால் அவர்களது பெயரும் பரிந்துரை செய்யப்படும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், சேலம் தெற்கு ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 8 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.
வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள், பணியாளர்கள் எண்ணிக்கை, கல்வித் தகுதி போன்ற விவரங்களை முன்னதாகவே சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை வேலை தேடும் மனுதாரர்களும், வேலையளிப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் க.மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment